திபெத் சுதந்திர சக்திக்கான ஆதரவை அமெரிக்கா நிறுத்த வேண்டும்:சீனா வலியுறுத்தல்
2024-07-08 20:02:10

திபெத் தொடர்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் அண்மையில் வெளியிட்ட கருத்து குறித்து, சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் ஜுலை 8ஆம் நாள் கூறுகையில்,

திபெத் விவகாரத்தில் தொடர்பாக சீன அரசின் நிலைப்பாடு நிலையாகவும் தெளிவாகவும் உள்ளது என்று தெரிவித்தார்.

14ஆம் தலாய் லாமா, மதம் என்ற பெயரில், சீனாவைப் பிளவுபடுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் விதம் வெளிநாட்டில் தஞ்சம் புகுந்த நபராவார். திபெத் விவகாரத்தின் முக்கியத்தன்மை மற்றும் அதன் உணர்வுடைய தன்மையை அறியுமாறும், எந்த விதத்திலும் சீனாவைப் பிளவுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடும் திபெத் சுதந்திர சக்திகளுக்கு ஆதரவு அளிப்பதை நிறுத்துமாறும் அமெரிக்காவுக்கு சீனா கோரிக்கை விடுப்பதாக அவர் தெரிவித்தார்.