ஷி ச்சின்பிங் ஹங்கேரி தலைமை அமைச்சர் ஓர்பனுடன் சந்திப்பு
2024-07-08 15:34:00

சீன அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங் ஜுலை 8ஆம் தேதி பெய்ஜிங் தியோயுடாய் தேசிய விருந்தினர் மாளிகையில், ஹங்கேரிறாட்டின் தலைமை அமைச்சர் விக்டர் ஓர்பனைச் சந்தித்தார்.

ஷி ச்சின்பிங் கூறுகையில், இரண்டு மாதங்களுக்கு முன் நான் ஹங்கேரியில் அரசு முறை பயணம் மேற்கொண்டேன், சீன-ஹங்கேரி உறவைப் புதிய யுகத்தில் முழு நாள் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவுக்கு உயர்த்துவதாக அறிவித்தோம். இது இருநாட்டு உறவுகளின் உயர் நிலை வளர்ச்சிக்கு வலுவான உந்து சக்தியை ஊட்டியுள்ளது என்று அவர் தெரிவித்தார். சீன கம்யூனிஸ்ட் கட்சி 20வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு அடுத்த வாரம் பெய்ஜிங்கில் நடைபெறவுள்ளது. சீனா சீர்திருத்தத்தை மேலும் முழுமையாக ஆழமாக்குவதோடு, உயர்தர வளர்ச்சி மற்றும் உயர் நிலை வெளிநாட்டுத் திறப்பை ஊக்குவிக்கும். இரு நாட்டு ஒத்துழைப்புக்குப் புதிய வாய்ப்பை வழங்கி, புதிய உயிராற்றல் ஊட்டும். இரு நாட்டுத் தலைவர்களின் தொடர்பை நிலைநிறுத்தி, ஒன்றுக்கு ஒன்று அரசியல் நம்பிக்கையை ஆழமாக்கி, பல்வேறு துறைகளில் பயனுள்ள ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதையை உயர் தரமுடன் கூட்டாகக் கட்டியமைக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.