எஸ்சிஒ நாடுகளின் பசுமையான வளர்ச்சிக் கருத்தரங்கிற்கு ஷிச்சின்பிங் வாழ்த்து
2024-07-08 10:43:01

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 8ஆம் நாள் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் பசுமையான வளர்ச்சிக் கருத்தரங்கிற்கு வாழ்த்து கடிதம் அனுப்பினார்.

அவர் இக்கடிதத்தில் கூறுகையில்,

உயிரினச் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து, பசுமையான வளர்ச்சியை விரைவுபடுத்துவது, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடுகளின் ஒருமித்த கருத்துக்களாகும். கடந்த சில ஆண்டுகளில், பசுமையான வளர்ச்சிக் கண்ணோட்டத்தில் சீனா ஊன்றி நின்று வருகிறது. உற்பத்தி, வளர்ச்சி, செழுமையான வாழ்க்கை, சீரான உயிரினச் சுற்றுச் சூழல் முதலியவற்றுடன் கூடிய நாகரிக வளர்ச்சிப் பாதையில் சீனா முன்னேறி வருகிறது. அருமையான சீனாவின் கட்டுமானம் மாபெரும் சாதனைகளைப் பெற்றுள்ளது. இக்கருத்தரங்கின் மூலம், பல்வேறு தரப்புகளுடன் சேர்ந்து, பசுமையான வளர்ச்சித் துறையின் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, பல்வேறு நாடுகளின் பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் தொடர்ச்சியான வளர்ச்சியைத் தூண்டி, இயற்கையுடன் மனிதன் நல்லிணக்கமாக பழகுவதை விரைவுபடுத்த சீனா  விரும்புவதாக தெரிவித்தார்.