கின்சாசா காங்கோவின் நிலைமை குறித்த சீனாவின் வேண்டுகோள்
2024-07-09 14:44:04

கின்சாசா காங்கோவிலுள்ள அனைத்து ஆயுதக் குழுக்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட்டு, கைப்பற்றியுள்ள பகுதிகளிலிருந்து வெளியேறுமாறு சீனா வேண்டுகோள் விடுத்துள்ளது என்று ஐ.நா.வுக்கான சீனத் துணை நிரந்தரப் பிரதிநிதி கெங் சுவங் ஜூலை 8ஆம் நாள் ஐ.நா.பாதுகாப்பவையின் கூட்டத்தில் தெரிவித்தார்.

கெங் சுவங் கூறுகையில், கின்சாசா காங்கோவிலுள்ள ஆயுதக் குழுக்கள் போர் நிறுத்தத்தையும் வன்முறை நடவடிக்கை நிறுத்தத்தையும் சர்வதேசச் சமூகம் முன்னேற்ற வேண்டும் என்றார். கடந்த 3 மாதங்களில், ஆயுதக் குழுக்களால் 500க்கும் மேற்பட்ட அப்பாவி மக்கள் கொல்லப்பட்டுள்ளனர். 73 இலட்சம் மக்கள் வீடுவாசலின்றி அல்லல்பட்டனர். கின்சாசா காங்கோவின் இறையாண்மை, சுதந்திரம் மற்றும்  உரிமை பிரதேசத்தின் ஒருமைப்பாட்டுக்குச் சர்வதேசச் சமூகம் மதிப்பு அளிக்க வேண்டும். கின்சாசா காங்கோவின் பாதுகாப்பையும் நிதானத்தையும் பேணிகாப்பதற்கும் மனித நேய நிலைமையை மேம்படுத்துவதற்கும் ஆக்கப்பூர்வ உதவிகளை வழங்கி, கின்சாசா காங்கோவின் கிழக்குப் பகுதியின் பிரச்சினை விரைவில் தீர்க்கப்படுவதைச் சர்வதேச சமூகம் முன்னேற்ற வேண்டும் என்று அவர் கூறினார்.