அமெரிக்காவில் முறையான இனவுணர்ச்சி மனப்பான்மை
2024-07-09 10:01:22

ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலின் 56ஆவது கூட்டம் 8ஆம் நாள் ஜெனிவாவில் தொடர்ந்து நடைபெற்றது. அப்போது ஐ.நா மனித உரிமை நிபுணர் அஷ்வினி கூறுகையில்,

அமெரிக்காவின் இனவுணர்ச்சி மனப்பான்மையும் இனவெறி பாகுபாடும் அதிக கவனம் ஈர்த்துள்ளது. ஆனால் முறையான இனவுணர்ச்சி மனப்பான்மையும் இனவெறி பாகுபாடும் அங்கே இன்னும் நீடிக்கின்றது என்றார்.

அமெரிக்காவின் அரசியல் தீவிரமயமாக்கம் மற்றும் நிதானமற்ற பொருளாதார நிலைமை, பகைமை ஏற்பட காரணங்களாகும். சமூகத்தில் ஒதுக்கப்பட்ட மக்களின் மீதான இனவெறியையும் தவறான எண்ணத்தையும் இது தீவிரமாக்கியுள்ளது என்று அவர் தெரிவித்தார்.