வாங் யீ பெலாரஸ் வெளியுறவு அமைச்சாருடன் பேச்சுவார்த்தை
2024-07-09 10:33:27

சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும், சீன வெளியுறவு அமைச்சருமான வாங் யீ, பெய்ஜிங்கில் ஜுலை 8ஆம் நாள் பெலாரஸ் வெளியுறவு அமைச்சர் மாக்சிம் ரெஜென்கோவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உறுப்பு நாடாக இணைவது குறித்து, வாங் யீ பெலாரஸூக்கு வாழ்த்து தெரிவித்தார். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் நடப்புத் தலைவர் பதவி வகிக்கும் சீனா அனைத்து தரப்புகளுடனும் இணைந்து, ‘ஷாங்காய் எழுச்சியை’ கூட்டாக பரவல் செய்து, ஒருங்கிணைப்பு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் வளர்ச்சியை முன்னெற்றி, ஐந்து பொது தாயகங்களை உருவாக்கி, அமைதியான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு மேலதிக பங்களித்து, உலக பலதுருவமயமாக்கம் மற்றும் பொருளாதார உலகமயமாக்கம் ஆகியவற்றை ஊக்குவிக்க விரும்புகிறது என்று அவர் தெரிவித்தார்.

இருதரப்புகளும் ‘உலகின் தென் பகுதி’ நாடுகளிடையிலான ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தி, வளரும் நாடுகளின் நியாயமான உரிமைகள் மற்றும் நலன்களை கூட்டாக பாதுகாத்து, ஐ.நாவின் சாசனத்தை மையமாக கொண்ட சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகளைக் கூட்டாக பாதுகாக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.