ரஷியாவில் இரண்டு புதிய துணை தூதரகங்கள்:இந்தியா
2024-07-09 20:06:56

ரஷியாவில் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடி, ரஷிய வாழ் இந்தியர்களைச் சந்திக்கும் நிகழ்வில் உரைநிகழ்த்துகையில்,

ரஷியாவின் யெகாடெரின்பர்க் மற்றும் கசான் ஆகிய இரு நகரங்களில் புதிய துணை தூதரகங்களை திறக்க இந்தியா திட்டமிட்டுள்ளது என்று தெரிவித்தார்.

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையே சுற்றுலா மற்றும் வணிகத்துறைகளின் வளர்ச்சியை வலுப்படுத்த இத்தூதரகங்கள் உதவிகரமாக இருக்கும் என்று மோடி தெரிவித்தார்.

தவிரவும், இது, கடந்த 10ஆண்டுகளில் ரஷியாவில் மேற்கொண்ட 6ஆவது பயணம் என்றும், ரஷிய தலைவருடன் 17 முறை சந்திப்பு நடத்தியுள்ளதாகவும் மோடி குறிப்பிட்டார். இந்தச் சந்திப்புகளின் மூலம் இரு நாடுகளின் பரஸ்பர நம்பிக்கை மற்றும் மரியாதை அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.