தெற்காசிய நாடுகளுடனான ஒத்துழைப்பு வலுப்படுத்துவோம், சீனா
2024-07-09 19:58:52

எதிர்காலத்தில் சீனா, தெற்காசிய நாடுகளுடன் டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பசுமை பொருளாதாரத் துறையில் ஒத்துழைப்பை விரைவுபடுத்தும் என்று, சீன அரசவையின் தகவல் தொடர்புப் பணியகம் 9ஆம் நாள் நடத்திய செய்தியாளர் கூட்டத்தில் வணிகத்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மேலதிக ஒத்துழைப்பு வாய்ப்புகளை உருவாக்கும் வகையில் சீன சர்வதேச இறக்குமதி பொருட்காட்சி உள்ளிட்ட கண்காட்சிகள் நடைபெறும் போது, தெற்காசிய நாடுகளுக்கு சீனா அழைப்பு விடுப்பதுடன் ஆதரவு மற்றும் வசதிகளையும் வழங்கும்.

தொழில் நிறுவனங்கள் சந்தைமயமாக்கம் மற்றும் வணிகமயமாக்க கோட்பாட்டின் படி தெற்காசிய நாடுகளுடனான வர்த்தக ஒத்துழைப்பை விரிவாக்குவதற்கு ஊக்கமளிக்க வேண்டும். உற்பத்தி-விநியோகம்-விற்பனை தொடர்பு, முதலீடு-கட்டுமானம்-நிர்வாகம் ஒன்றிணைப்பு உள்ளிட்ட ஒத்துழைப்பு மாதிரியை ஆழமாக்கி, டிஜிட்டல் மற்றும் பசுமைத் தொழில் துறைகளிலான ஒத்துழைப்பை புத்தாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.