இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவில் வழங்கப்பட்ட 15 ஆயிரத்து 410 கோடி யுவான் கடன்
2024-07-09 14:59:00

சீன தேசிய வளர்ச்சி வங்கி வெளியிட்ட தரவுகளின்படி, இவ்வாண்டின் முதல் பாதியில் இவ்வங்கி மின்சாரம், எண்ணெய் மற்றும் எரிவாயு ஆகிய எரியாற்றல் உள்கட்டமைப்பு துறைகளுக்கு 15 ஆயிரத்து 410 கோடி யுவான் கடனை வழங்கியது. இக்கடன் முக்கியமாக புதிய மின்சார அமைப்புகள், பாலைவனங்கள் மற்றும் பாலைவனமாக்கல் பகுதிகளில் பெரிய அளவிலான பசுமை எரியாற்றல் தளங்கள், எரியாற்றல் இருப்புக்கள் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதன் மூலம், இது புதிய எரியாற்றல் அமைப்புகளின் கட்டுமானத்தை விரைவுபடுத்தவும், தேசிய எரியாற்றல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவும், பொருளாதாரம் மற்றும் சமூகத்தின் பசுமை மற்றும் குறைந்த கார்பன் மாற்றத்தை ஊக்குவிக்கவும் உதவும்.