சீனா எனும் சாக்குப்போக்கில் நேட்டோவின் ‘ஆசிய-பிசிபிக் கனவு’ நிறைவேறுவது சாத்தியமில்லை
2024-07-10 09:33:37

நேட்டோ உச்சிமாநாடு 9ஆம் நாள், வாஷிங்டன்னில் தொடங்கியது. இந்தோ ஆசியா பிரதேசத்தின் கூட்டாளிகளுடனான ஒத்துழைப்புகளை அதிகரித்து, சீனாவை எதிர்க்க வேண்டும் என்று இந்த உச்சிமாநாட்டிற்கு முன்பு நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டென்பெர்க் தெரிவித்தார்.

பனிப் போர் தொடர்ச்சி மற்றும் உலகில் மிகப் பெரிய இராணுவக் குழுமான நேட்டோ நிறுவப்பட்ட பிறகு, அமெரிக்கா ஒன்றியத்தை உருவாக்கி பகைமையைத் தீவிரமாக்கி, பிற நாடுகளை கட்டுப்படுத்தும் கருவியாக நேட்டோ விளங்குகிறது.

ஆசியாவில் சீனா மீதான கட்டுப்பாட்டுத் தடையை நேட்டோ உருவாக்குவது கடினம். ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் கூறப்படும் புதிய பாதுகாப்புக் கட்டுகோப்பைக் கட்டியமைப்பது சாத்தியமில்லை. முதலில் ஆசிய-பசிபிக் நாடுகள் நேட்டோவை வரவேற்காது. அடுத்து, நேட்டோவின் உறுப்பு நாடுகள், நேட்டோவின் ஆசிய-பசிபிக்மயமாக்கத்தை புறக்கணிக்கின்றன.

பிரிவினை, மோதல் மற்றும் போர்களைத் தீவிரமாக்குவதே இதன் திட்டம் ஆகும். அமெரிக்காவின் மேலாதிக்கத்திற்கு இது சேவை புரிகிறது. இதன் விளைவாக தோல்வியிலிருந்து யாரும் தப்ப முடியாது என்பது உண்மை.