சீன மற்றும் கினியா-பிசாவ் தலைவர்கள் பேச்சுவார்த்தை
2024-07-10 20:54:04

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் 10ஆம் நாள் சீனாவில் அரசுமுறைப்பயணம் மேற்கொண்டுள்ள கினியா-பிசாவ் நாட்டின் அரசுத் தலைவர் எம்பலோவுடன் பெய்ஜிங்கில் பேச்சுவார்த்தை மேற்கொண்டார். இரு நாட்டு உறவை நெடுநோக்கு கூட்டாளி உறவாக உயர்த்த இரு நாட்டு தலைவர்களும் ஒருமனதுடன் ஒப்புக்கொண்டனர்.

ஷிச்சின்பிங் கூறுகையில்,

பல்வேறு மட்டங்களான நட்புப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதோடு, வேளாண்மை, நிலக்கரி, அடிப்படை வசதிகளின் கட்டுமானம், கடல் பொருளாதாரம் உள்ளிட்ட விவகாரங்களின் ஒத்துழைப்பை விரிவாக்க சீனா விரும்புகின்றது. மேலும், கினியா-பிசாவின் உணவுப் பாதுகாப்புக்கும் பொது சுகாதார வளர்ச்சிக்கும் உதவி அளிக்கும் வகையில், சீனா தொடர்ந்து நெல் சாகுபடி தொழில் நுட்ப நிபுணர்களையும் மருத்துவச் சிகிச்சைக்குழுவையும் அந்நாட்டுக்கு அனுப்பும் என்று ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

எம்பலோ கூறுகையில்,

கினியா-பிசாவுக்கும் சீனாவுக்கும் இடையேயான உறவு சீராகவும் உறுதியாகவும் உள்ளது. இரு தரப்பும் எப்போதும் ஒன்றுக்கொன்று ஆதரவு அளித்து வருகின்றன. சீனா ஆப்பிரிக்க நாடுகளுக்கு, பள்ளி, மருத்துவமனை, நெடுஞ்சாலை உள்ளிட்ட ஆப்பிரிக்க மக்களுக்கு பலன் தரும் ஒத்துழைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தி உள்ளது என்றார். மேலும், ஆப்பிரிக்க கண்டத்தின் வளர்ச்சிக்காக சீனா முக்கிய பங்காற்றி வருகிறது என்றும் அவர் பாராட்டு தெரிவித்தார்.