சர்வதேச சமூகம் உக்ரைன் நெருக்கடியைத் தணிக்க சீனா வேண்டுகோள்
2024-07-10 10:47:54

உள்ளூர் நேரப்படி 9ஆம் நாள், உக்ரைன் நிலைமை குறித்து ஐ.நாவின் பாதுகாப்பவை தற்காலிக கூட்டம் நடத்தியது.  இதில் உக்ரைன் உள்ளிட்ட பல நாடுகள் பங்கேற்றன. உக்ரைனில் தீவிரமாகி வரும் நெருக்கடியால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து, ஐ.நாவுக்கான சீனாவின் நிரந்தர பிரதிநிதி கெங் ஷுவாங்  கவலை தெரிவித்தார். இருதரப்பு நேரடி பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்குவதற்காக நிலைமைகளை வழங்கவும் உதவவும் சர்வதேச சமூகத்திற்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.

அவர் மீண்டும் கூறுகையில், உக்ரைன் பிரச்சினையில், அனைத்து நாடுகளின் இறையாண்மை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாடு மதிக்கப்பட வேண்டும், ஐ.நாவின் சாசனத்தின் நோக்கங்கள் மற்றும் கோட்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும், அனைத்து நாடுகளின் நியாயமான பாதுகாப்பு அக்கறைகள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும், நெருக்கடியை அமைதியாக தீர்க்கும் அனைத்து முயற்சிகளும் ஆதரிக்கப்பட வேண்டும் என்று சீனா எப்போதும் வலியுறுத்தி வருகிறது என்றார்.