ஜூன் திங்களில் சீனத் தேசிய நுகர்வோர் விலை அதிகரிப்பு
2024-07-10 10:18:09

2024ஆம் ஆண்டின் ஜூன் திங்களில், சீனத் தேசிய நுகர்வோர் விலை, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகமாகும். நகரங்களில் இக்குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.2 விழுக்காடு அதிகமாகும். கிராமப்புறங்களில் இக் குறியீடு, கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.4 விழுக்காடு அதிகமாகும். உணவுப் பொருட்களின் விலை 2.1 விழுக்காடு குறைந்துள்ளது. உணவு அல்லாத பொருட்களின் விலை, 0.8 விழுக்காடு அதிகமாகும். நுகர்வுப் பொருட்களின் விலை 0.1 விழுக்காடு குறைவாகும். சேவை விலை 0.7 விழுக்காடு அதிகமாகும். ஜனவரி முதல் ஜூன் வரை, சீனத் தேசிய நுகர்வோர் விலை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 0.1 விழுக்காடு அதிகமாகும்.

ஜூன் திங்களில் சீனத் தேசிய நுகர்வோர் விலை, மே திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு குறைவாகும். நகரங்களில் இக்குறியீடு, மே திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு குறைவாகும். கிராமப்புறங்களில் இக்குறியீடு, மே திங்களில் இருந்ததை விட 0.2 விழுக்காடு குறைவாகும். உணவுப் பொருட்களின் விலை 0.6 விழுக்காடு குறைவாகும். உணவு அல்லாத பொருட்களின் விலை, 0.2 விழுக்காடு அதிகமாகும். நுகர்வுப் பொருட்களின் விலை 0.4 விழுக்காடு குறைவாகும். சேவை விலை மே திங்களின் நிலைக்குச் சமமாகும்.