காசாவில் இஸ்ரேல் வேண்டுமென்றே பஞ்சத்தை உருவாக்கியது: ஜ.நா. நிபுணர் குழு அறிவிப்பு
2024-07-10 11:03:59

ஐ.நாவின் மனித உரிமை விவகார உயர் ஆணையர் அலுவலகத்தின் இணைய தளம் 9ஆம் நாள் ஒரு கட்டுரையை வெளியிட்டது. இது குறித்து ஐ.நாவின் மனித உரிமை கவுன்சிலால் நியமிக்கப்பட்ட ஒரு சுயேச்சை நிபுணர் குழுவின் புலனாய்வு படி, அண்மையில் மேலதிகமான பாலஸ்தீன காசா குழந்தைகள் பசி மற்றும் ஊட்டச்சத்து பற்றாகுறையால் இறந்து விட்டனர். வடக்கு காசாவிலிருந்து மத்திய மற்றும் தெற்கு காசா வரை பஞ்சம் பரவியுள்ளது என்று சந்தேகத்திற்கு இடமின்றி காட்டுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாலஸ்தீன மக்களுக்கு எதிராக இஸ்ரேல் வேண்டுமென்றே மற்றும் இலக்கு வைக்கப்பட்ட பஞ்சத்தை உருவாகுவது, இனவெறி ஒழிப்பு ஆகும். இந்நடவடிக்கையால், காசா முழுவதும் பஞ்சத்தில் சிக்கிக்கொள்ளும் என்று நிபுணர்கள் குழு கருதுகிறது. தேவையான சர்வதேச சமூகம் வழிமுறைகளின் மூலம், தரை மார்க்க நுழைவாயிலின் மூலம் மனிதாபிமான உதவிகளை வழங்க வேண்டும், காசா மீதான இஸ்ரேலின் முற்றுகையை முடிவுக்குக் கொண்டுவரவும், போர்நிறுத்தத்தை நனவாக்கவும் நிபுணர் குழு வேண்டுகொள் விடுத்தது.