உக்ரைன் மோதலுக்கு பேச்சுவார்த்தை தீர்வு:புதின்,மோடி கருத்து
2024-07-10 19:06:49

பேச்சுவார்த்தை மூலம் அமைதியான முறையில் உக்ரைன் மோதலை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று ரஷிய அரசுத் தலைவர் புதினும் இந்திய தலைமையமைச்சர் நரேந்திர மோடியும் வலியுறுத்தினர்.

இரு தரப்பினரும் 9ஆம் நாள் மாஸ்கோவில் பேச்சுவார்த்தை மேற்கொண்ட பின் வெளியிட்ட கூட்டு அறிக்கையில்,

இரு நாடுகளுக்கிடையே பொருளாதாரம் உள்ளிட்ட 9 ஒத்துழைப்பு ஆவணங்கள் கையொழுத்தானவை. பேச்சுவார்த்தையின்போது, 2030ஆண்டுக்குள் இரு தரப்பு நெடுநோக்கு ஒத்துழைப்புக்கான முக்கிய அம்சங்கள் பற்றி இரு தரப்பினரும் முக்கியமாக விவாதித்தனர். 2030ஆம் ஆண்டுக்குள் இரு நாட்டு வர்த்தகத் தொகையை 10000கோடி அமெரிக்க டாலர் வரை உயர்த்தும் இலக்கும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்புத்துறையில் கூட்டு உற்பத்தி பற்றி விவாதிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவிரவும், தங்களது நாணயங்களைப் பயன்படுத்தி, இரு நாடுகளுக்கிடையே இரு தரப்பு கணக்கு தீர்க்கும் முறைமையை மேலும் வளர்க்க புதினும் மோடியும் ஒப்புக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.