தென் சீனக் கடல் வழக்குக் குறித்த நடுவர் தீர்ப்புக்கு சீனா மறுப்பு
2024-07-11 11:19:40

தென் சீனக் கடல் வழக்குக் குறித்த நடுவர் தீர்ப்பிற்குச் சீனா மீண்டும் மறுப்பு தெரிவித்துள்ளது. அதோடு, குவாயாங் கடல் ஆய்வு மையம், தென் சீனக் கடல் ஆய்வகம், சீனச் சர்வதேச சட்ட கழகம் ஆகியவை ஒன்றிணைந்து இத்தீர்ப்புக்கு மீண்டும் மறுப்புரையான அறிக்கை ஒன்றை 11ஆம் நாள் பெய்ஜிங் மாநகரில் வெளியிட்டன.

தென் சீனக் கடல் தொடர்புடைய சர்ச்சைக்குரிய பிரச்சினைகளுக்கான சாராம்சம் இவ்வறிக்கையில் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. தவிரவும், தென் சீனக் கடல் குறித்த நடுவர் வழக்கு தீர்ப்புக்கான கட்டுப்பாட்டுப் பிரச்சினை, நடுவர் தீர்ப்புக்கான வரலாற்று உரிமை, கண்ட நாடுகளின் தொலைதூரத் தீவுகள், தீவுகளின் தகுநிலை போன்ற பிரச்சினைகள் பற்றிய சட்ட விளக்கம், உண்மையைத் தீர்மானிக்கும் பிரச்சினை ஆகியவை தெளிவான முறையில் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் இத்தீர்ப்பின் தவறு மற்றும்  சர்வதேச சட்டத்திற்குக் கொண்டு வரும் தீங்குகள் முதலியவைகளும் இந்த அறிக்கையில் விவரிக்கப்பட்டுள்ளன.