தென் சீனக் கடல் சுற்றுச்சூழலுக்கு ஊறு விளைவிக்கும் பிலிப்பைன்ஸ்
2024-07-11 09:51:28

அண்மையில், தென் சீனக் கடல் பற்றிய இரண்டு முக்கிய அறிக்கைகளைச் சீனா வெளியிட்டது. முதலாவது, ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழல் நிலைமை குறித்த ஆய்வு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை ஜூலை 10ஆம் நாள் வெளியிடப்பட்டது. இரண்டாவது, ரென் அய் ஜியாவோவில் சட்டவிரோதமாக நிறுத்தப்பட்டுள்ள போர்க் கப்பல்களால் பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்புகளுக்கு ஊறு ஏற்படுவது குறித்த ஆய்வறிக்கை  8ஆம் நாள் வெளியிடப்பட்டது.

தனிச்சிறப்புடன் கூடிய கவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட உண்மையான ஆய்வின் மூலம்,ஹூவாங்யன் தீவு, ரென் அய் ஜியாவோ ஆகியவற்றின் சுற்றுச்சூழல் அமைப்பு நிலைமையை இவ்விரண்டு அறிக்கைகளும் முறையே ஆய்வு செய்து, அவை தொடர்பான முடிவுகளைப் பெற்றுள்ளன. அதாவது, ஹூவாங்யன் தீவின் சுற்றுச்சூழலின் தரம் சிறப்புமிக்கது. அங்குள்ள பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்பும் ஆரோக்கியமானது. ஆனால், ரென் அய் ஜியாவோ பவளப்பாறை சுற்றுச்சூழல் அமைப்பு கடுமையாக சேதமடைந்துள்ளது. இதற்கு அங்கு சட்டவிரோதமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பிலிப்பைன்ஸ் போர்க் கப்பல்கள் மற்றும் தொடர்புடைய மனித நடவடிக்கைகளே முக்கியக் காரணங்களாகும்.

கடல் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் சீனா செலுத்தி வரும் கவனத்தை இந்த முடிவுகள் காட்டுகின்றனது. கடந்த பல ஆண்டுகளில் தென் சீனக் கடலின் கடல் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டுச் சீனா பல வேலைகளைச் செய்துள்ளது.

கடல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு பிரச்சினை, மனித நலன்களுடன் தொடர்பானது. தென் சீனக் கடல் பிரச்சினை, தனிப்பட்ட நாடுகளின் புவியமைவு அரசியல் மோதலை முன்னேற்றுவதற்கும் தங்கள் சொந்த நலன்களை நனவாக்குவதற்கும் அரசியல் கருவியாக மாறிவிடக்கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.