சி.ஜி.டி.என். கருத்துக் கணிப்பு:உலகில் சீனாவின் மேலதிக உயிராற்றல் மீது பெரும்பாலானோர் எதிர்பார்ப்பு
2024-07-11 16:26:33

நடைபெறவுள்ள சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 20வது குழுவின் 3வது முழு அமர்வு உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. சீன பாணி நவீனமயமாக்கலை ஊக்குவிக்கவும் சீர்திருத்தங்களை மேலும் ஆழமாக்க இதில் நடவடிக்கை எடுக்கப்படும். சீன ஊடகக் குழுமத்தின் சி.ஜி.டி.என். உலகளவில் நடத்திய கருத்துக் கணிப்புகளின்படி, 76.9 விழுக்காட்டினர் சீனாவின் உயர்தர வளர்ச்சி சாதனைகளைப் பாராட்டியதுடன், உலகிற்கு மேலதிக வாய்ப்புகளை வழங்குவதற்காக சீனாவின் மேலும் விரிவான சீர்திருத்தங்கள் மீது எதிர்பார்ப்பு தெரிவித்துள்ளனர்.

புதிய வளர்ச்சித் தேவைகள் குறித்து, சீனா உள்ளூர் நிலைமைகளுக்கு ஏற்ப புதிய உயர்தர உற்பத்தி ஆற்றலை உருவாக்குவதை முன்மொழிந்து,  உயர்தர வளர்ச்சியில் வலுவான உயிராற்றலை அதிகரித்துள்ளது குறித்து, 87.1 விழுக்காட்டினர் ஒற்றுமை தெரிவித்தனர். புதிய உயர்தர உற்பத்தி ஆற்றல் சீன பாணி நவீனமயமாக்கல் செயல்முறையை வேகமாகவும் சிறப்பாகவும் ஊக்குவிக்கும் என்றும் அவர்கள் கருத்து தெரிவித்தனர். மக்களை மையமாகக் கொண்ட சீனாவின் வளர்ச்சிக் கருத்தை 84.3 விழுக்காட்டினர் பாராட்டியுள்ளனர்.