இஸ்ரேலுக்கு 500 புவண்டு வெட்டிகுண்டுகளை வழங்குவதை அமெரிக்கா தொடங்குகின்றது
2024-07-11 19:59:28

அமெரிக்கா இஸ்ரேலுக்கு 500 பவுண்டு அளவிலான வெடிகுண்டுகள் மீண்டும் வழங்க உள்ளதாக அமெரிக்காவின் வாஷிங்டன் போஸ்ட் 10ஆம் நாள் செய்தி வெளியிட்டது.

முன்னதாக, இஸ்ரேல் ரஃபா பகுதியில் இராணுவ நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட விவகாரங்களில் அமெரிக்காவும் இஸ்ரேலும் கருத்து வேறுபாடுகள் கொண்டதால், 500 மற்றும் 2000 பவுண்டு அளவிலான வெடிகுண்டுகளை வழங்கும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.

மத்தியகிழக்கு பகுதியின் நிலைமை தீவிரமடைவதைத் தவிர்க்க முயற்சித்து வரும் மனப்பான்மையை அமெரிக்கா வெளிக்காட்டுவதோடு, தொடர்ந்து இஸ்ரேலுக்கு ஆயுதங்களை வழங்கி வருகின்றது. அமெரிக்காவின் போலித்தனமான முகத்தை இது காட்டியுள்ளது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.