நேட்டோ உச்சி மாநாட்டில் சீனா மீது அவதூறிய கூற்றுக்கு சீனா எதிர்ப்பு
2024-07-11 20:20:02

நேட்டோவின் வாஷங்டன் உச்சி மாநாட்டு அறிக்கையில், ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியத்தில் பதற்ற சூழலை அதிகரித்தல், பனிப்போர் கருத்துகள், போர்க்குணம் நிறைந்த கூற்றுகள் இடம்பெற்றுள்ளன. இதில், சீனா தொடர்பான அம்சங்களில், தப்பு எண்ணம், அவதூறு மற்றும் ஆத்திரமூட்டு தன்மை ஆகியவை நிரம்பியிருந்தது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள சீனா, நேட்டோவிடம் வன்மையான மனநிறைவின்மையை தெரிவித்துள்ளதாக சீன வெளியுறவு அமைச்சகம் 11ஆம் நாள் தெரிவித்தது.

வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் கூறுகையில், உக்ரைன் பிரச்சினைக்கு சீனாவே பொறுப்பு என்ற நேட்டோ, எந்த ஆதாரங்களும் இல்லை. அது, தீய நோக்கத்துடன் கூறிய கூற்றாகும் என்று குறிப்பிட்டார்.

நேட்டோ எந்த சாட்சியங்களையும் அளிக்காமல், தொடர்ந்து அமெரிக்காவினால் உருவாக்கப்பட்ட போலியான தகவல்களைப் பரப்பி, வெளிப்படையாக சீனா மீது அவதூறு பரப்பி, சீனாவுக்கும் ஐரோப்பியாவுக்கு இடையேயான உறவு மற்றும் ஒத்துழைப்பைச் சீர்குலைக்கிறது. உக்ரைன் மோதல் நெருப்பில் மேலும் எரிபொருள் சேர்ப்பது யார் என்பதை சர்வதேச சமூகத்தில் அனைவரும் அறிந்ததே. உக்ரைன் மோதலைத் தீர்க்கும் வகையில், பொறுப்பைத் தட்டிக்கழிக்கும் செயலுக்கு மாறாக, நடைமுறையாக்க நடவடிக்கைகள் எடுக்குமாறு நேட்டோவிடம் கேட்டு கொண்டோம் என்றும் லீன் ஜியன் தெரிவித்தார்.