வளர்ச்சி பகிர்வுக்கான உலகளாவிய செயல் மன்றத்தின் 2ஆவது உயர் நிலை கூட்டம்
2024-07-12 19:15:14

வளர்ச்சி பகிர்வுக்கான உலகளாவிய செயல் மன்றத்தின் 2ஆவது உயர் நிலை கூட்டம் ஜுலை 12ஆம் நாள் பெய்ஜிங்கில் தொடங்கியது. தொடரவல்ல மேம்பாட்டை முன்னேற்றுவோம்:தொடர்ச்சியான செயலும் கூட்டு எதிர்காலமும் என்ற தலைப்பில் நடைபெற்று வரும் இக்கூட்டத்தில், 160க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகளின் உயர் நிலைப் பிரதிநிதிகள் பங்கெடுத்துள்ளனர்.

சீன வெளியுறவு அமைச்சர் வாங்யீ கூட்டத்தின் துவக்க விழாவில் உரைநிகழ்த்தினார்.

தவிரவும், செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கத்தின் சர்வதேச கூட்டமைப்பு (IFRC) உள்ளிட்டவையுடன், புதிய ஒத்துழைப்பு ஆவணங்களை சீனா உருவாக்க உள்ளது. உலகளாவிய தெற்கு நாடுகளின் நவீனமயமாக்கலை முன்னேற்றுதல், ஆற்றல் மாற்றம் மற்றும் தொடர்வல்ல வளர்ச்சி, எண்ணியல் காலத்தின் இளைஞ்ர்களின் பொறுப்பு உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும், இக்கூட்டத்தில் ஆலோசிக்கப்பட உள்ளது.