தேசிய ஆட்சி முறையை மேம்படுத்துவது சுய-புரட்சி
2024-07-12 16:06:34

சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி என்பது சீனப் பாணி நவீனமயமாக்கம் வெற்றி பெறும் ஆற்றலாகும் என்று 2004ஆம் ஆண்டில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார். சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவது முக்கிய கட்டத்தில் நுழையும் என்பதற்கான வலுவான சமிக்ஞையாக அவரது கருத்து அமைந்தது.

சீனப் பாணி நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதற்கான அடிப்படை உந்து சக்தியாக சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்கும் பணி திகழும் என்பதை ஷிச்சின்பிங் உறுதிப்படுத்தினார். நடைமுறைப் போக்கில் அமைப்பு முறைக் கட்டுமானம் முக்கியமானது. தேசிய நிர்வாக அமைப்பின் நவீனமயமாக்கல் அளவை மேம்படுத்தும் வகையில், முழுமையான, அறிவியல் பூர்வமான பயனுள்ள அமைப்பு முறையை உருவாக்கப் பாடுபடுவோம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் "சுய-புரட்சி" என்பது "தேசிய ஆட்சி முறை அமைப்பு மற்றும் நிர்வாகத் திறனின் நவீனமயமாக்கலைச்" சீனக் கம்யூனிஸ்ட் கட்சி நனவாக்குவதற்கான முக்கியமான முன் நிபந்தனையாகும். அந்த வகையில் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்பு பணி நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் இணைக்கும் "முக்கியப் பகுதியாகும்" என்பது குறிப்பிடத்தக்கது.