வாங் யீ மற்றும் நெதர்லாந்தின் வெளியுறவு அமைச்சர் ஃபெல்ட்கேம்ப் தொலைபேசி மூலம் தொடர்பு
2024-07-12 11:23:29

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழுவின் உறுப்பினரும் வெளியுறவு அமைச்சருமான வாங் யீ நெதர்லாந்தின் புதிய வெளியுறவு அமைச்சர் ஃபெல்ட்கேம்ப்பினுடன் 11ஆம் நாள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டார். 

அப்போது வாங் யீ கூறுகையில், சீனாவிற்கும் நெதர்லாந்திற்கும் இடையிலான திறப்பு மற்றும் நடைமுறை பன்முக ஒத்துழைப்பு கூட்டாளி உறவு சீராக வருகிறது, இது இரு நாட்டு மக்களுக்கு உறுதியான நன்மைகளை கொண்டு வருவதோடு, பிராந்தியம் மற்றும் உலகின் அமைதியான வளர்ச்சிக்கு பங்களிக்கின்றது. மேலும் நெதர்லாந்தின் புதிய அரசாங்கத்துடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்தவும், பன்முகமான உரையாடல்களை நடத்தவும், ஒன்று ஒன்று புரிந்துணர்வை மேம்படுத்தவும் சீனா விரும்புகின்றது என்றார். சீனாவை புறநிலையாகவும் சரியாகவும் பார்க்க நெதர்லாந்து ஐரோப்பாவுக்கு உதவும் என்றும், சீனா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளின் ஆரோக்கியமான மற்றும் நிலையான வளர்ச்சிக்கு முக்கியப் பங்களிக்கும் என்று சீனா நம்புவதாக வாங்யீ தெரிவித்தார்.