© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040
குவாங்தொங் மாநிலத்தின் ஷென்ச்சேன் நகரில் சீனச் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணியின் தலைமை வடிவமைப்பாளரான டெங் சியோ பிங் 1979ஆம் ஆண்டில் சீனாவின் முதலாவது சிறப்புப் பொருளாதார மண்டலத்தைத் தனிப்பட்ட முறையில் நிறுவினார். 2012ஆம் ஆண்டின் டிசம்பர் 8ஆம் நாள், சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் குவாங்தொங் மாநிலத்துக்குச் சென்று ஆய்வுப் பயணம் மேற்கொண்டார். அன்று சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் பொதுச் செயலாளராக அவர் முதல் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்ட 24ஆவது நாட்களாகும்.
2013ஆம் ஆண்டில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வு நடைபெற்றது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய தலைமை குழு தொடர்ந்து சீர்திருத்தத்தை எவ்வாறு முன்னேற்றும் என்பது உலகக் கவனத்தின் மையமாக மாறியது. சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 19வது மத்திய கமிட்டியின் 3வது முழு அமர்வில் பரிசீலனையின் மூலம் நிறைவேற்றப்பட்ட சீன கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டு நிறுவனங்களின் சீர்திருத்தத்தை ஆழப்படுத்துவதற்கான முடிவுகள் மற்றும் திட்டங்கள் பரிசீலனை செய்யப்பட்டது. அதோடு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப்பணி நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு, மிக பெரிய அளவிலான நிறுவனச் சீர்திருத்தப் பணி துவங்கியது.
சீனா புதிய யுகத்தில் நுழைந்த கடந்த பல ஆண்டுகளில், சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதை, ஆட்சி முறையின் பொது நெடுநோக்குத் திட்டத்தில் ஷிச்சின்பிங் இணைத்தார். மேலும் சீர்திருத்தங்களைப் பன்முகங்களிலும் ஆழப்படுத்துவதற்கான உயர்மட்ட வடிவமைப்பையும் அவர் உருவாக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.