ஷிச்சின்பிங் ஜெரெமியா மனெலியுடன் சந்தித்துரையாடினார்
2024-07-12 20:28:04

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங் ஜுலை 12ஆம் நாள் மாலை பெய்ஜிங்கிலுள்ள மக்கள் மாமண்டபத்தில் சீனாவில் அதிகாரப்பூர்வமான பயணம் மேற்கொண்டுள்ள சாலமன் தீவுகளின் தலைமையமைச்சர் ஜெரெமியா மனெலியைச் சந்தித்துரையாடினார்.

சீனா, சாலமன் தீவுகளை நல்ல நண்பராகவும் நல்ல கூட்டாளியாகவும் நல்ல சகோதராகவும் கருதுகிறது. சாலமன் தீவுகள் தங்களது நாட்டு நிலைமைக்குப் பொருந்திய வளர்ச்சிப் பாதையில் நாட்டு இறையாண்மை பாதுகாப்பு மற்றும் வளர்ச்சி நலன்களைப் பேணிகாப்பதற்கு சீனா ஆதரவு அளிக்கிறது என்று ஷிச்சின்பிங் சுட்டிக்காட்டினார். சாலமன் தீவுகளின் வளர்ச்சியடைவதற்குத் தொடர்ந்து இயன்ற உதவியளித்து, ஐ.நா, பசிபிக் தீவு நாடுகளின் கருத்தரங்கு உள்ளிட்ட பல தரப்பு அமைப்புகளில் ஒருங்கிணைந்து வளரும் நாடுகளின் கூட்டு நலன்களைப் பாதுகாக்க சீனா விரும்புகின்றது என்றும் ஷிச்சின்பிங் குறிப்பிட்டார்.

மனெலி பேசுகையில், எனது சீனப் பயணம் புஃசியான் மாநிலத்தில் துவங்கியது. சீனாவின் மாபெரும் வளர்ச்சி சாதனைகளை நன்றாக அறிந்துகொண்டதுடன், சாலமன் தீவுகள்-சீன ஒத்துழைப்பில் இருந்த பெரும் உள்ளார்ந்த ஆற்றலையும் ஒளிமயமான எதிர்காலத்தையும் உணர்ந்து கொண்டேன் என்று தெரிவித்தார். ஒரே சீனா என்ற கோப்பாட்டை சாலமன் உறுதியாக பின்பற்றி, எந்த வடிவமான தைவான் சுதந்திர செயல்பாடுகளை எதிர்த்து, நாட்டு ஒருமைப்பாட்டுக்கு சீன அரசு மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளுக்கும் ஆதரவு அளிப்போம் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், இருதரப்பினரும் கூட்டறிக்கையை வெளியிட்டனர்.