சரியான வழிமுறையின் மூலம் கிடைத்த அதிகமான பயன்
2024-07-12 12:43:12

ஷான்தொங் மாநிலத்தின் தலைநகர் ச்சிநான்னில் 2024ஆம் ஆண்டின் மே திங்கள் 23ஆம் நாளில், சீர்திருத்தம் பற்றிய தொழில் நிறுவனங்கள் மற்றும் நிபுணர்கள் கருத்தரங்கு நடைபெற்றது. இந்நிகழ்வில் சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் சிறப்புரை நிகழ்த்தினார். சீர்திருத்தம் செய்ய வேண்டுமானால், குறிப்பிட்ட பகுதிகளைத் திருத்தம் செய்வதோடு,  வேறு பகுதிகளை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். விஷயங்களின் வளர்ச்சி முன்னேற்றப் போக்கின்படியே பணி செய்வதால், இதன் பயன்கள் பல மடங்கு அதிகமாக ஏற்படும். குறிப்பாக உங்களின் பாதி முயற்சியிலேயே இரட்டிப்புப் பலன்கள் கிடைக்க வேண்டும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த இலக்கை நனவாக்கும் வகையில், ஷிச்சின்பிங் தொடர்ச்சியான நடவடிக்கைகளை ஒட்டுமொத்த ரீதியில் மேற்கொண்டுள்ளார். ஒட்டுமொத்த நிலையில் ஒன்றிணைப்பை உறுதிப்படுத்துவது என்பது அவரது நடவடிக்கையின் முக்கிய வழிமுறையாகும்.

இந்நடவடிக்கையின் அடிப்படையில், ஒட்டுமொத்த அல்லது ஒன்றிணைப்பு ரீதியில் மிகவும் கவனம் செலுத்த வேண்டும். அமைப்புமுறைக் கண்ணோட்டத்தை முழுநிலைக் கண்ணோட்டமாகக் கருத்தில் கொண்டு அதனை விரைவுபடுத்த வேண்டும் என்பது வளர்ச்சிக்கான ஷிச்சின்பிங்கின் மற்றொரு திறவுகோல் ஆகும்.

சீர்திருத்தத்தை பன்முகங்களிலும் ஆழமாக்குவது குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில்,

முழுமையான நிலையில் அமைப்புமுறையில் சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றப் பணிகளை மேற்கொள்ள வேண்டும். அதோடு, பல்வேறு துறைகளில் சீர்திருத்தம் மற்றும் முன்னேற்றங்களை இணைத்து ஒருங்கிணைக்க வேண்டும் என்றார்.