பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற கருத்தரங்கில் சாவ் லேஜி பங்கெடுப்பு
2024-07-13 19:47:02

10ஆவது பிரிக்ஸ் நாடுகளின் நாடாளுமன்ற கருத்தரங்கு ஜூலை 11, 12 ஆகிய நாட்களில் ரஷியாவின் சென்ட் பீடர்ஸ்பெர்க் நகரில் நடைபெற்றது. சீனத் தேசிய மக்கள் பேரவைத் தலைவர் சாவ் லேஜி இக்கருத்தரங்கில் கலந்து கொண்டு உரை நிகழ்த்தினார்.

ஜூலை 11ஆம் நாள் இக்கருத்தரங்கின் முழு அமர்வில் அவர் பேசுகையில், பிரிக்ஸ் நாடுகளின் சட்டமியற்றல் அமைப்புகள் நீண்டகாலமாக நட்பார்ந்த ஒத்துழைப்பு மேற்கொண்டு, பிரிக்ஸ் நெடுநோக்கு கூட்டாளியுறவை ஆழமாக்குவதற்கு முக்கிய பங்காற்றுகிறது. நடப்பு கருத்தரங்கு, பிரிக்ஸ் அமைப்பில் உறுப்பு நாடு புதிதாக சேர்ந்த பின் நடைபெற்ற முதலாவது நாடாளுமன்ற கருத்தரங்காகும். உலகின் தென் பகுதி, ஒற்றுமை மற்றும் சுய வலிமையுடனும் செழிப்பாகவும் வளர்ந்து வரும் போக்கினையும், வளர்ச்சியைக் கூட்டாக நாடும் உறுதியான விருப்பத்தையும் இது வெளிப்படுத்தியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர் கூறுகையில், பிரிக்ஸ் நாடுகளின் சட்டமியற்றல் அமைப்புகள், திறப்பு, இணக்கம், ஒத்துழைப்பு, கூட்டு வெற்றி ஆகியவை கொண்ட பிரிக்ஸ் எழுச்சியைப் பரவல் செய்து, பிரிக்ஸ் நாடுகளின் ஒற்றுமையை வலுப்படுத்தி, பிரிக்ஸ் ஒத்துழைப்பு அமைப்பு முறையின் உயர் தரமான வளர்ச்சிக்கு உதவி, பிரிக்ஸ் நாடுகளின் பொது நலன்களைப் பேணிகாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.