கூறப்படும் “சிட்சாங்-சீன சர்ச்சையைத் தீர்ப்பது பற்றிய சட்ட வரைவை” சட்டமாக்குவதற்கு சீனா எதிர்ப்பு
2024-07-13 19:04:04

கூறப்படும் சிட்சாங்-சீன சர்ச்சையைத் தீர்ப்பது பற்றிய சட்ட வரைவை சட்டமாக்குவது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஜூலை 13ஆம் நாள் செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், இச்சட்ட வரைவு, அமெரிக்க அரசின் நிலைப்பாடு மற்றும் வாக்குறுதியையும், சர்வதேச உறவின் அடிப்படை கோட்பாட்டையும் மீறி, சீனாவின் உள் விவகாரத்தில் வன்மையாக தலையிட்டு, சீனாவின் நலன்களை கடுமையாக சீர்குலைத்து, சிட்சாங் சுதந்திர சக்திக்கு கடுமையான தவறான சமிக்கையை விடுத்துள்ளது. சீனா இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது என்று தெரிவித்தார்.

அவர் மேலும் கூறுகையில், பண்டைக்காலம் தொட்டு, சிட்சாங் சீனாவின் ஒரு பகுதியாகும். எந்த வெளிப்புற சக்தியும் இதில் தலையிடுவதை சீனா அனுமதிக்காது. அமெரிக்க தரப்பு எதார்த்தமான நடவடிக்கை மூலம், சிட்சாங் சீனாவின் ஒரு பகுதியாகும் என்ற வாக்குறுதியையும் சிட்சாங் சுதந்திரத்தை ஆதரிக்காது என்ற வாக்குறுதியையும் பின்பற்றி, இந்த சட்ட வரைவைச் செயல்படுத்தக்கூடாது என சீனா வேண்டுகோள் விடுப்பதாக தெரிவித்தார்.