இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி மே மாதத்தில் 5.9 சதவீத வளர்ச்சி
2024-07-13 19:10:04

இந்தியாவின் தொழிற்சாலைகளின் செயல்பாடு வளர்ச்சி நடப்பு  ஆண்டின் மே மாதத்தில் 5.9 சதவீதம் அதிகரித்துள்ளது என்று  அந்நாட்டின் அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட தகவல்களில் தெரியவந்துள்ளன.

மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட செயலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, 2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில், தொழில்துறை உற்பத்தி குறியீட்டின் மதிப்பீடு 154.2 ஆக இருந்தது, இது கடந்த 2023 ஆம் ஆண்டு மே மாதத்தில் 145.6 ஆக இருந்தது.

2024 ஆம் ஆண்டின் மே மாதத்தில் சுரங்க தொழில் உற்பத்தி துறை குறியீடு 136.5 ஆக, உற்பத்தி தொழில் குறியீடு 149.7 ஆக , மின்சாரத் துறைகளுக்கான உற்பத்தி குறியீடு  229.3 ஆக இருந்தன என்று தரவுகள் காட்டுகிறது.