சீனத் தேசிய மக்கள் பேரவை நிரந்தரக் கமிட்டி தலைவரின் ரஷியப் பயணம்
2024-07-13 19:43:31

சீன தேசிய மக்கள் பேரவை நிரந்தர கமிட்டியின் தலைவர் சாவ் லேஜி ஜூலை 9 முதல் 13ஆம் நாள் வரை ரஷியாவில் அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டார். அவர் சென்ட் பீடர்ஸ்பெர்க் நகரில் ரஷிய அரசுத் தலவைர் விளாடிமிர் புதினைச் சந்தித்துரையாடினார்.

இச்சந்திப்பில் சாவ் லேஜி கூறுகையில், இவ்வாண்டு சீன-ரஷிய தூதாண்மை உறவு நிறுவப்பட்ட 75ஆவது ஆண்டு நிறைவாகும். இரு நாட்டு அரசுத் தலைவர்களின் நெடுநோக்கு வழிகாட்டலுடன், சீன-ரஷிய புதிய யுக பன்முக நெடுநோக்கு ஒத்துழைப்புக் கூட்டாளியுறவு, உயர் நிலையிலும் உயர் தரத்திலும் வளர்ந்து வருகிறது. இது, இரு நாட்டு மக்களுக்கு நன்மைகளைக் கொண்டு வந்துள்ளது. சில நாட்களுக்கு முன், அரசுத் தலைவர் ஷி ச்சின்பிங்கும் ரஷிய அரசுத் தலைவர் புதினும் அஸ்தானாவில் மீண்டும் சந்திப்பு நடத்தி, பல நெடுநோக்கு ஒத்த கருத்துக்களை எட்டியுள்ளனர். சீனத் தேசிய மக்கள் பேரவை, ரஷியக் கூட்டாட்சி பேரவையுடன் இணைந்து, சட்டமியற்றல் அமைப்பு ரீதியில் இரு நாட்டு அரசுத் தலைவர்களின் முக்கிய ஒத்த கருத்துக்களைச் செயல்படுத்தி, ஒன்றுக்கொன்று அரசியல் நம்பிக்கையை வலுப்படுத்தி, எதார்த்த ஒத்துழைப்பை ஆழமாக்கி, மக்களின் நட்புறவை அதிகரிப்பதற்கு பங்காற்ற வேண்டும் என சீனா விரும்புவதாக தெரிவித்தார்.