இவ்வாண்டின் முதல் பாதியில் சீன வெளிநாட்டு வர்த்தகச் சாதனைகள்
2024-07-13 17:35:27

இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவின் வெளிநாட்டு வர்த்தகத் துறை பல சாதனைகளைப் பெற்றுள்ளது. சரக்குப் பொருட்களின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி தொகை 21 இலட்சத்து 17 ஆயிரம் கோடி யுவானாகும். இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 6.1 விழுக்காடு அதிகமாகும். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் சீனப் பொருட்கள் மீது கூடுதல் சுங்க வரி வசூலிப்பது உள்ளிட்ட சாதகமற்ற பின்னணியில், சீனாவின் வெளிநாட்டு வர்த்தகம் இத்தகைய எதிர்பார்ப்புகளைத் தாண்டிய சாதனைகளைப் பெறுவது எளிதல்ல என்று பிரிட்டனின் பைனான்சியல் டைம்ஸ் உள்ளிட்ட செய்தி ஊடகங்கள் கருத்து தெரிவித்தன.

முதலாவது சீன வெளிநாட்டு வர்த்தக அளவு மேலும் அதிகமாக இருக்கின்றது. இவ்வாண்டின் முதல் பாதியில், சீனாவின் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி அளவு வரலாற்றின் அதே காலத்தை விட 21 இலட்சம் கோடி யுவானை முதன்முறையாக தாண்டியுள்ளது. இது வரலாற்றில் மிக அதிகமாகும்.

இரண்டாவது, தரம் மேலும் சிறப்பாக இருக்கின்றது. இவ்வாண்டின் முதல் பாதியில் வர்த்தக ஏற்றுமதி மற்றும் இறக்குமதியின் விகிதம் 65 விழுக்காடாகும். இது வெளிநாட்டு வர்த்தகத்தின் வளர்ச்சியைத் தூண்டும் முக்கிய சக்தியாக மாறியுள்ளது.

பல்வேறு நாடுகளுக்கு உயர்தர மற்றும் மலிவான பொருட்களை வழங்குவதோடு, சீனா பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கான மிகப்பெரிய நுகர்வோர் சந்தையையும் உருவாக்கியுள்ளது. புள்ளிவிவரங்களின் படி, இவ்வாண்டின் முதல் பாதியில் சீனாவின் சரக்குப் பொருட்களின் இறக்குமதித் தொகை கடந்த ஆண்டின் இதே காலத்தில் இருந்ததை விட 5.2 விழுக்காடு அதிகமாகும்.

“சீனாவில் தயாரிக்கப்பட்டது” மற்றும் சீனாவின் உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலி நன்மை ஆகியவற்றால் சீன வெளிநாட்டு வர்த்தகத் துறையில் பல சாதனைகள் பெறப்பட்டுள்ளன. இதைத் தவிர, தற்போது சீனப் பொருட்களுக்கான உலகளாவிய தேவை சீனாவின் ஏற்றுமதியை முன்னேற்றியுள்ளது. புதிய தர உற்பத்தி திறனின் விரைவான முன்னேற்றம், சீன வெளிநாட்டு வர்த்தகத்தின் சீரான வளர்ச்சியை விரைவுபடுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.