இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 657 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது
2024-07-14 16:20:03

இந்திய நாட்டின் மத்திய வங்கியான, 'ரிசர்வ் வங்கி' வெளியிட்டுள்ள வாராந்திர புள்ளிவிவர அறிக்கையில், நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு, கடந்த ஜூலை 5ம் தேதி வரையிலான காலத்தில், 657.155 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.

ஒட்டுமொத்த அந்நிய செலாவணி கையிருப்பு  முந்தைய வாரத்தை விட 5.16 பில்லியன் டாலர்கள் உயர்ந்திருந்தது

அந்நிய செலாவணி கையிருப்பின் மிகப்பெரிய அங்கமான வெளிநாட்டு நாணய சொத்துக்கள் (எஃப்.சி.ஏ) 577.11 பில்லியன் டாலர்களாகவும், தங்க இருப்பு 57.432 பில்லியன் டாலராகவும் உள்ளன என்று ரிசர்வ் வங்கி  வெளியிட்ட தரவுகள் தெரிவிக்கின்றன.

அந்த வாரத்தில் வெளிநாட்டு நாணய மதிப்பிலான சொத்துக்கள் 42.29 பில்லியன் டாலர் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. அதே நேரத்தில் நாட்டின் தங்கத்தின் இருப்பு 904 மில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.