சீனாவுடன் மேலதிக ஒத்துழைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்க்கும் ஈரான் அரசு
2024-07-14 19:50:54

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அரசுத் தலைவர் மசூத் பெசெஷ்கியன் அண்மையில் கூறுகையில், சீனாவுடனான நட்புறவை ஈரான் பேணி மதிக்கிறது. தனது தலைமையிலுள்ள ஈரானின் புதிய அரசு, சீனாவுடன் மேலும் விரிவான முறையில் ஒத்துழைப்புகளை மேற்கொள்ள எதிர்பார்க்கிறது என்றார்.

அவர் ஜூலை 12ஆம் நாள் தெஹரான் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட கட்டுரையில், தன் தூதாண்மை உறவுக்கான கொள்கையைப் பன்முகங்களிலும் எடுத்துக்கூறினார். 2023ஆம் ஆண்டு, ஈரான்-சௌதி அரேபியா உறவு இயல்பு நிலைக்கு மீட்பதை முன்னேற்றுவதற்கு சீனா முக்கிய பங்காற்றியுள்ளது. 2025ஆம் ஆண்டு ஈரான்-சீனப் பன்முக ஒத்துழைப்புத் திட்டம், இரு நாடுகள் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவை உருவாக்குவதற்கான முக்கிய மைல் கல்லாகும் என்றும் அவர் இக்கட்டுரையில் தெரிவித்தார்.