தைவானுக்கு அமெரிக்காவின் ஆயுத விற்பனை குறித்து சீனா கருத்து
2024-07-15 19:26:59

அமெரிக்காவின் 6 ராணுவ தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் 5 உயர் நிலை நிர்வாகிகளின் மீது தடை நடவடிக்கை மேற்கொள்ள சீன வெளியுறவு அமைச்சகம் ஜூலை 12ஆம் நாள் அறிவித்தது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லீன் ஜியன் 15ஆம் நாள் செய்தியாளர் கூட்டத்தில் கூறுகையில், அமெரிக்கா, சீனாவின் தைவான் பிரதேசத்துக்கு ஆயுதங்களை விற்பனை செய்தது, ஒரே சீனா என்ற கோட்பாட்டையும், சீன-அமெரிக்க மூன்று கூட்டறிக்கைகளையும் கடுமையாக மீறி, சீனாவின் உள் விவகாரத்தில் கடுமையாக தலையிட்டு, சீனாவின் அரசுரிமை மற்றும் உரிமைப் பிரதேச ஒருமைப்பாட்டை கடுமையாக சீர்குலைத்துள்ளது. சட்டத்தின் படி, அண்மைக்காலத்தில் தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்த அமெரிக்காவின் முக்கிய ராணுவத் தொழிற்துறை நிறுவனங்கள் மற்றும் அந்த நிறுவனங்களின் உயர் நிலை நிர்வாகிகள் மீது சீனத் தரப்பு தடை நடவடிக்கை மேற்கொள்கிறது என்று தெரிவித்தார்.

தைவான் பிரச்சினை, சீனாவின் மைய நலன்களில் உள்ள மையமாகும். எந்த நாடும், எந்த அமைப்பும் மற்றும் தனிநபரும், நாட்டின் அரசுரிமை மற்றும் உரிமை பிரதேச ஒருமைப்பாட்டை சீன அரசு மற்றும் மக்கள் பேணிகாக்கும் மனவுறுதியைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்று அவர் வலியுறுத்தினார்.