ஈரானின் புதிய அரசுத் தலைவரின் கூற்று பற்றிய சீனாவின் நிலைப்பாடு
2024-07-15 17:33:41

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஈரான் அரசுத் தலைவர் மசூத் பெசெஷ்கியன் ஜூலை 13ஆம் நாள் தெஹரான் டைம்ஸ் நாளேட்டில் வெளியிட்ட கட்டுரையில், தன் தூதாண்மை உறவுக்கான கொள்கையை எடுத்துக்கூறியதோடு, புதிய சர்வதேச ஒழுங்கை உருவாக்கும் பாதையில் சீனாவுடன் ஒத்துழைப்புகளை ஆழமாக்க எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் கூறுகையில், சீன-ஈரான் தூதாண்மை உறவு உருவாக்கப்பட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக, இரு தரப்புறவு சீராகவும் நிதானமாகவும் வளர்ச்சியடைந்து வருகிறது. சிக்கலான பிரதேச மற்றும் சர்வதேச சூழ்நிலையில், இரு நாடுகள் ஒன்றுக்கொன்று ஆதரவளித்து, பல்வேறு துறைகளில் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்புகளை முன்னேற்றி வருகின்றன. மேலும், சீன-ஈரான் உறவின் வளர்ச்சிக்கு சீனா முக்கியத்துவம் அளிக்கிறது. ஈரானின் புதிய அரசுடன் இணைந்து, சீன-ஈரான் பன்முக நெடுநோக்கு கூட்டாளி உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற விரும்புவதாகவும் தெரிவித்தார்.