இலங்கையில் டெங்கு நோயால் 30,000 பேர் பாதிப்பு 12 பேர் உயிரிழப்பு
2024-07-15 17:06:51

இலங்கையில் நடப்பு ஆண்டில் இதுவரை 30 ஆயிரம் பேர் வரை டெங்கு நோய்யால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து, தற்போது வரை 30 ஆயிரத்து 57 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும்,  12 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. இதில் ஜூலை மாதத்தில் மட்டும் ஆயிரத்து 818 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இலங்கையின் மேற்கு மாகாண பகுதியில் 38.8 சதவீதமும், வட மாகாண பகுதியில் 15.1 சதவீதமும், மத்திய மாகாணப் பகுதியில் 9.5 சதவீதமும், சப்ரகமுவ மாகாண பகுதியில் 10.2 சதவீதமும் டெங்கு நோய் பாதிப்பு பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு  தெரிவித்துள்ளது.