சீர்திருத்தத்தை முழுமையாக ஆழமாக்குவது ஷி ஜின்பிங்கின் நோக்கம்
2024-07-15 16:31:30

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது தேசிய மாநாட்டுக்குப் பின், சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் பொதுச் செயலாளர் ஷி ஜின்பிங், அரசியல் வலிமையான துணிவு மற்றும் பொறுப்புணர்வுடன் ஆழமான சீர்திருத்தத்தை ஊக்குவித்து வருகிறார். மேலும் சீனத் தனிச்சிறப்பியல்பு வாய்ந்த சோஷலிச லட்சியத்தின் புதிய நிலைமையையும் துவக்கி வைத்தார்.

கடந்த 10 ஆண்டுகளில், ஷி ஜின்பிங் நாடு முழுவதும் பயணம் செய்தார். சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டியின் தலைமை குழு, மற்றும் சீர்திருத்தத்தை ஆழமாக்குவது பற்றிய மத்திய கமிட்டி ஆணையத்தின் 70க்கும் மேற்பட்ட கூட்டங்களுக்கு அவர் தலைமை தாங்கினார். ஷி ஜின்பிங்கின் தனிப்பட்ட திட்டமிடல், பரவல் மற்றும் வழிக்காட்டல் ஆகியவற்றின் கீழ், சீர்திருத்தத்தைப் பன்முகஸ்களிலும் ஆழமாக்கும் பணி உறுதியாக முன்னேறி வருகிறது.