சீர்திருத்தமும், திறப்புக் கொள்கையுமே சீனாவின் தொடர்வளர்ச்சிக்குக் காரணம்: ஷிச்சின்பிங்
2024-07-16 09:40:42

வெளிநாட்டுத் திறப்பு மற்றும் சீர்திருத்தம், எப்போதும் ஒன்றுடன் ஒன்று சேர்ந்து முன்னேற்றி வருகிறது. வெளிநாட்டுத் திறப்பின் மூலம், சீர்திருத்தத்தையும் வளர்ச்சியையும் விரைவுபடுத்துவது, சீனா தொடர்ந்து முன்னேற்றமடைந்து வருவதற்கான முக்கியக் காரணமாகும் என்று சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் தெரிவித்தார்.

பண்டைகாலத்திலிருந்து, சீனாவின் நாகரிகம், உலகளவில் வேறுபட்ட நாகரிகங்களுடன் திறந்த மனப்பான்மையுடனும் சகிப்புத் தன்மையுடனும் அது தொடர்ச்சியாகவும் சீராகவும் வளர்ந்து வருவதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும்.

சீனாவின் நாகரிகத்தின் திறப்பு மற்றும் சகிப்புத் தன்மை குறித்து ஷிச்சின்பிங் கூறுகையில்,

வேறு நாகரிகங்களுடன் இணைந்து தொடர்ந்து ஒன்றுடன் ஒன்று பகிர்ந்துகொண்டு கற்றுக்கொள்ளும் போக்கில் உண்டாகும் திறந்த அமைப்புமுறையே, சீனாவின் நாகரிகம் என்று குறிப்பிட்டார்.

2012ஆம் ஆண்டு முதல் இது வரை, பரந்தளவில் வெளிநாட்டு பயன்களைத் திரட்டி, சகிப்பு தன்மையுடன் கூடிய, வெளிநாட்டுத் திறப்பு வளர்ச்சி எனும் புதிய கண்ணோட்டத்தை ஷிச்சின்பிங் முன்வைத்தார். வெளிநாட்டுத் திறப்பிலிருந்து உலகில் பல்வேறு நாடுகளுக்கிடையில் திறப்பு என்ற ஒட்டுமொத்த நிலைக்கு அவரது பரந்த மனப்பான்மை உயர்த்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.