வாகனத் துறையின் வளர்ச்சி விதிகளை அமெரிக்கா பின்பற்ற வேண்டும்:சீனா
2024-07-16 14:42:13

பணவீக்கக் குறைப்பு சட்டத்தின் கீழ் புதிய எரியாற்றல் வாகனங்களுக்கான மானிய நடவடிக்கையின் மூலம் ஏற்றுக்கொண்டது. சீனாவின் உற்பத்திப் பொருட்கள் மற்றும் தொழில் துறை சங்கிலி பற்றிய பாகுபாடு தன்மை வாய்ந்த கொள்கைகள் அமெரிக்கா வகுக்கப்பட்டுள்ளன. குறிப்பிட்ட நாடுகளின் வளர்ச்சியைத் தடுக்கும் அடிப்படையில், சொந்த நாட்டின் புதிய எரியாற்றல் வாகனத் தொழில் துறை சங்கிலியை வளர்ப்பது இதன் நோக்கமாகும். சீன மின்சார இயந்திர உற்பத்திப் பொருட்கள் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி வணிகச் சங்கம் ஜூலை 16ஆம் நாள் தெரிவித்தது.

அமெரிக்காவின் இந்நடவடிக்கைகள் குறித்து, உலக வர்த்தக அமைப்பின் நிபுணர் குழு ஒன்றை உருவாக்க சீனா கோரியுள்ளது என்பதற்கும், சீனாவின் புதிய எரியாற்றல் வாகனத் தொழில் துறையின் சட்டப்பூர்வமான வளர்ச்சி உரிமையைப் பேணிக்காப்பதற்கும் ஆதரவளிக்கும் என்று இச்சங்கம் தெரிவித்தது.

உலக வர்த்தக அமைப்பின் தொடர்புடைய வதிகளையும் கடமைகளையும் அமெரிக்கா கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். பாகுபாடு வாய்ந்த மானியக் கொள்கைகளை உடனடியாக திருத்த வேண்டும். ஒருதரப்புவாதம் மற்றும் வர்த்தக பழிவாங்கல் நடவடிக்கைகளையும் அமெரிக்கா நிறுத்த வேண்டும் என்று இச்சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.