இலங்கை அரசுத் தலைவர் தனி வேட்பாளர் என்ற தகுநிலையுடன் அரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்வார்
2024-07-17 19:12:12

இலங்கை அரசுத் தலைவர் விக்ரமசிங்கே தனி வேட்பாளர் என்ற தகுநிலையுடன் 2024ஆம் ஆண்டுக்கான அரசுத் தலைவர் தேர்தலில் கலந்து கொள்வார் என்று அந்நாட்டின் ஐக்கிய தேசியக் கட்சியின் பொது செயலாளர், தேர்தல் குழுவினருடன் கூட்டம் நடத்திய பின் அறிவித்தார்.

இவ்வாண்டு அக்டோபர் 5ஆம் நாள் இலங்கையில் அரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் என்று இலங்கை அரசின் அலுவலர் ஒருவர் முன்னதாக தெரிவித்தார்.