இந்தியாவின் ஜிடிபி வளர்ச்சி 7 சதவீதமாக இருக்கும் - சர்வதேச நாணய நிதியம் கணிப்பு
2024-07-17 16:57:27

சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எஃப்) செவ்வாய்க்கிழமை 2024-25 ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி கணிப்பை கடந்த ஏப்ரல் மாதத்தில் கணிக்கப்பட்ட 6.8 சதவீதத்திலிருந்து 7 சதவீதமாக உயர்த்தியுள்ளது.

சர்வதேச நாணய நிதியம் தனது அறிக்கையில் "இந்தியாவின் வளர்ச்சிக்கான கணிப்பு இந்த ஆண்டு 7.0 சதவீதமாக அதிகரித்து திருத்தப்பட்டுள்ளது,  2023 ஆம் ஆண்டில் மேல்நோக்கிய இந்த மாற்ற திருத்தங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தனியார் நுகர்வுக்கான மேம்பட்ட வாய்ப்புகள் இந்த வளர்ச்சிக்கு காரணம் என்று தெரிவித்துள்ளது.

2025 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி 6.5 சதவீதமாகக் குறையும் என்று சர்வதேச நாணய நிதியம் எதிர்பார்க்கிறது.

இந்தியாவில் 2023 ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 8.2 சதவீதமாக விரிவடைந்தது, இது 2022 இல் பதிவு செய்யப்பட்ட 7 சதவீதத்தை விட அதிகமாகும்.