நேட்டோ மற்றும் சில நாடுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்:சீனா
2024-07-17 09:56:37

ஐ.நா.பாதுகாப்பவை ஜூலை 16ஆம் நாள் நடத்திய சர்வதேச ஒழுங்கு மற்றும் பல தரப்பு ஒத்துழைப்பு குறித்த வெளிப்படை விவாதத்தில் ஐ.நா.வுக்கான சீன நிரந்தரப் பிரதிநிதி ஃபூ சுங் கூறுகையில், உலகில் ஒரே ஒரு ஒழுங்கு மட்டுமே உள்ளது. அது சர்வதேச சட்டத்தின் அடிப்படையிலானது. ஐ.நா. சாசனத்தின் கோட்பாட்டின் அடிப்படையில் சர்வதேச உறவுகளின் அடிப்படை விதிமுறைகள் ஒரே ஒரு விதி மட்டுமே உள்ளது என்றார்.

அவர் மேலும் கூறுகையில், நேட்டோ எங்கு சென்றாலும் கொந்தளிப்பான அமைதியின்மையையும் குழப்பத்தையும் தோற்றுவிக்கும் என்பதை உண்மை முழுமையாக காட்டுகின்றது. நேட்டோ மற்றும் சில நாடுகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும். பிற நாடுகளுக்கு தீங்கு விளைவித்து தனக்கு நன்மை பயத்து, பொது பாதுகாப்பைச்  சீர்குலைக்கும் தொந்தரவு செய்பவர்களாக இருக்கக் கூடாது என்று சீனா வலியுறுத்துகின்றது.