அமெரிக்காவுடன் இராணுவ கட்டுப்பாடு கலந்தாய்வு பற்றிய சீனாவின் பதில்
2024-07-17 18:59:11

இராணுவ கட்டுப்பாடு மற்றும் ஆயுதப் பரவல் தடுப்பு பற்றிய கலந்தாய்வை சீனாவும் அமெரிக்காவும் 2023ஆம் ஆண்டு நவம்பர் திங்கள் வாஷிங்டனில் நடத்தின. தனியொரு அமெரிக்க உயர்நிலை அதிகாரி கடந்த காலக் கட்டத்தில் அமெரிக்காவுடன் புதிய சுற்று கலந்தாய்வை நடத்துவதை சீனா மறுத்ததாக குற்றஞ்சாட்டினார். இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜூலை 17ஆம் நாள் கூறுகையில், கடந்த காலக் கட்டத்தில், சீனாவின் உறுதியான எதிர்ப்பை அமெரிக்கா புறக்கணித்து, தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்து, சீனாவின் மைய நலன்களைச் சீர்குலைக்கும் எதிர்மறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இராணுவக் கட்டுப்பாட்டுக் கலந்தாய்வை இரு தரப்பும் தொடர்ந்து நடத்தும் அரசியல் சூழ்நிலையை இது கடும் சீர்குலைத்துள்ளது. இந்நிலையில், அமெரிக்காவுடன் புதிய சுற்று கலந்தாய்வை நடத்துவதை தற்காலிகமாக நிறுத்த சீனா முடிவு செய்துள்ளது என்றார்.

மேலும், ஒன்றுக்கொன்று மதிப்பு அளிப்பது, சமாதான சக வாழ்வு, ஒத்துழைப்புகளின் மூலம் வெற்றி பெறுவது ஆகிய அடிப்படைகளில், சர்வதேச இராணுவ கட்டுப்பாடு பற்றி அமெரிக்காவுடன் தொடர்பை நிலைநிறுத்த சீனா விரும்புகிறது. ஆனால், சீனாவின் மைய நலன்களுக்கு அமெரிக்கா மதிப்பு அளித்து, இரு தரப்புகளின் பரிமாற்றத்துக்கு நிலைமையை உருவாக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.