ஆசிய-பசிபிக் வளரும் நாடுகளின் வளர்ச்சி முன்மதிப்பீடு உயர்வு
2024-07-17 15:18:42

2024ஆம் ஆண்டு ஆசிய வளர்ச்சியின் முன்னாய்வு பற்றிய அறிக்கையை ஆசிய வளர்ச்சி வங்கி ஜூலை 17ஆம் நாள் வெளியிட்டது. அதில் ஆசிய-பசிபிக் பிரதேசத்தில் வளரும் நாடுகளின் 2024ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சி பற்றிய முன் மதிப்பீடு 4.9விழுக்காட்டிலிருந்து 5.0விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது. 2025ஆம் ஆண்டு பொருளாதார வளர்ச்சிக்கான முன்மதிப்பீடு 4.9விழுக்காடாக நிலைப்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், 2024ஆம் ஆண்டு சீனாவின் பொருளாதார வளர்ச்சிக்கான முன்மதிப்பீடு 4.8விழுக்காடு மற்றும் 2025ஆம் ஆண்டு 4.5விழுக்காடு என்ற ஆசிய வளர்ச்சி வங்கியின் முந்தைய மதிப்பீடு மாறவில்லை.

ஆசிய-பசிபிக் வளரும் நாடுகளின் பணவீக்க விகிதம் தொடர்ந்து குறையும் என்றும் இவ்வறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.