சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய தீர்மானத்தின் 3 முக்கியப் பகுதிகள்
2024-07-19 10:57:42

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3ஆவது முழு அமர்வில் சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவது பற்றிய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. ஜூலை 19ஆம் நாள் நடப்பு முழு அமர்வின் சிறப்பம்சத்தை விளக்கிக் கூற, சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்திய கமிட்டி செய்தியாளர் கூட்டத்தை நடத்தியுள்ளது. 

செய்தியாளர் கூட்டத்தில் இத்தீர்மானத்துதின் 3 முக்கிய பகுதிகளை மத்தியக் கமிட்டியின் கொள்கை ஆய்வு அலுவலகத்தின் துணை இயக்குநர் டாங் ஃபாங்யு அறிமுகப்படுத்தினார். முதலாவது பகுதியில், சீர்திருத்தத்தை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்கி, சீன நவீனமயமாக்கத்தை முன்னேற்றுவதன் முக்கியத்துவம் மற்றும் அதற்கான ஒட்டுமொத்த கோரிக்கை விளக்கிக் கூறப்பட்டுள்ளது.

இரண்டாவது பகுதியில், பொருளாதார அமைப்பு முறை ரீதியிலான சீர்திருத்தத்தின் மூலம், பல்வேறு துறைகளின் சீர்திருத்தத்தைப் பன்முகங்களிலும் வழிநடத்துதல் என்னும் முக்கிய அம்சம் இடம் பெற்றுள்ளது.

மூன்றாவது பகுதியில் சீர்திருத்தம் குறித்து கட்சியின் தலைமையை வலுப்படுத்தி கட்சியின் கட்டமைப்பு முறையிலான சீர்திருத்தத்தை ஆழமாக்குவது முக்கியமாகக் கூறப்பட்டுள்ளது என்றார்.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 18ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வையடுத்து, சீர்திருத்தத்தைப் பன்முகங்கிலும் ஆழமாக்குவதன் நடைமுறையாக்கத்தின் தொடர்ச்சி இத்தீர்மானமாகும். இது, புதிய யுகத்தில் சீனப் பாணி நவீனமயமாக்கலை முன்னேற்றுவதற்கான புதிய அத்தியாயமாகவும், சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் இன்னொரு முக்கியமான ஆவணமாகவும் விளங்கும் என்று பொதுவாகக் கருதப்படுகின்றது.