சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் முன்னேற்றம்
2024-07-19 10:39:13

அண்மையில் முடிவடைந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி 20ஆவது மத்தியக் கமிட்டியின் 3வது முழு அமர்வு, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணிக்கான முக்கிய மைல் கல்லாகும். சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் மூலம் வல்லரசு கட்டுமானத்தையும் தேசிய இன மறுமலர்ச்சியையும் பன்முகங்களிலும் முன்னேற்றும் முக்கியமான காலகட்டத்தில் சீனா நுழைந்துள்ளது என்று இம்முழு அமர்வில் கருதப்பட்டது.

சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் கூறுகையில், சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் வெற்றியைத் தீர்மானிக்கும் "முக்கிய நடவடிக்கை" ஆகும். சீர்திருத்தமும் திறப்பும் ஒன்றுக்கு ஒன்று மேம்பட்டு வருகின்றன. வெளிநாட்டுத் திறப்புப் பணி, சீனப் பாணி நவீனமயமாக்கத்தின் சிறப்பாகும் என்றார்.

சீன அரசுத்தலைவர் ஷிச்சின்பிங், சீர்திருத்ததைப் பன்முகங்களிலும் ஆழமாக்குவதிலிருந்து, சீர்திருத்ததை மேலும் பன்முகங்களிலும் ஆழமாக்குவதற்குரிய வகையில், சீர்திருத்தத்தின் முக்கியத் திட்டத்தை நெடுநோக்கு ரீதியில் அமைத்து, பொருளாதார அமைப்புச் சீர்திருத்தத்தின் தலைமையில், சமூகத்தின் நேர்மை மற்றும் நீதியை மேம்படுத்தி, மக்களுக்கான நலன்களை அதிகரித்து சீனப் பாணி நவீனமயமாக்கத்துக்குத் தொடர்ந்து உயிராற்றல் ஊட்டியுள்ளார்.