சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு புத்துயிர் அளிக்க இலங்கை நிதி வசதி திட்டங்கள் அறிமுகம்
2024-07-19 18:58:50

தெற்காசிய நாடான இலங்கையில் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் நடவடிக்கைகளுக்கு புத்துயிர் அளிக்கும் வகையில் அந்நாட்டின் அரசுத் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் ஒருங்கிணைந்த நிதி உதவி திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டின் அரசு தலைவர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இதில் அந்நிறுவனங்களுக்கான முதலீடு மற்றும் நடைமுறை மூலதன நிதி உதவி வசதிகள் இரண்டும் அடங்கும் என்று தெரிவித்துள்ளது.

இதனை வணிக வங்கிகள் மற்றும் சிறப்பு வங்கிகள் உள்பட 15 நிதி நிறுவனங்கள் மூலம் வழங்கப்படும் கடன்கள் பத்து ஆண்டுகளில் 7 சதவீத சலுகை வட்டி வீகிதத்தில் வழங்கப்படும்  இந்த திட்டத்திற்காக இலங்கையின் ரூபாய் மதிப்பில் மொத்தம் 13 பில்லியன் (43 மில்லியன் டாலர்கள்) ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

இக்கடன்களை பெற,  தகுதி வாய்ந்த நிறுவனங்கள் தங்களின் நிறுவனத்தின் வளர்ச்சி மேம்பாட்டுத் திட்டங்களை ஆராய்ந்து அவற்றுக்கு தொழில்துறை அமைச்சகம் பரிந்துரைக் கடிதங்களை வழங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.