சீன வெளியுறவு துணை அமைச்சர் ஜப்பான் மற்றும் தென் கொரியாவில் பயணம்
2024-07-19 17:40:12

சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் லின்ஜியான் ஜூலை 19ஆம் நாள் கூறுகையில், சீன வெளியுறவு துணை அமைச்சர் மா சாவ்ஷு ஜூலை 21 முதல் 25ஆம் நாள் வரை ஜப்பானின் டோக்கியோ, தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்களுக்குச் சென்று, 16வது சுற்று சீன-ஜப்பான் நெடுநோக்கு பேச்சுவார்த்தை, 10வது சுற்று சீன-தென் கொரிய வெளியுறவு அமைச்சகங்களின் உயர் நிலை நெடுநோக்கு பேச்சுவார்த்தை ஆகியவற்றில் கலந்து கொள்ளவுள்ளார்.

இப்பேச்சுவார்த்தைகளில், இரு தரப்புறவு மற்றும் பொது அக்கறை கொண்ட சர்வதேச மற்றும் பிரதேசப் பிரச்சினைகள் குறித்து இரு தரப்பினரும் கருத்துகளை ஆழமாக பரிமாற்றிக் கொள்ளவுள்ளனர். பேச்சுவார்த்தைகளின் மூலம் தொடர்புகள் மற்றும் ஒத்துழைப்புகளை வலுப்படுத்தி, சீன-ஜப்பானிய மற்றும் சீன-தென் கொரிய உறவின் சீரான வளர்ச்சியை முன்னேற்ற சீனா விரும்புவதாக அவர் தெரிவித்தார்.