சீன வர்த்தகக் கொள்கை மீதான உலக வர்த்தக அமைப்பின் 9ஆவது பரிசீலனை நிறைவு
2024-07-20 18:38:23

சீன வர்த்தக கொள்கைக்கு உலக வர்த்தக அமைப்பு மேற்கொண்ட 9ஆவது பரிசீலனைப் பணி 19ஆம் ஜெனீவாவில் முடிந்தது.

எதிர்காலத்தில் சீனா மேலும் விரிவான சீர்திருத்தத்தை ஆழமாக்கி, வெளிநாட்டுக்கான திறப்பை விரிவாக்கி, உயர் தரமான வளர்ச்சியைத் ஊக்குவிக்கும். இது, உலகிற்கு புதிய மற்றும் அதிக வாய்ப்புகளைக் கொண்டு வரும் என்று உலக வர்த்தக அமைப்பின் உறுப்பினர்கள் நம்புவதற்கு காரணம் இருப்பதாக சீனத் தரப்பு தெரிவித்தது.

சீனத் தரப்பு, நேர்மை மற்றும் திறந்த மனப்பான்மையுடன், உறுப்பினர்கள் கவனங்களுக்குப் பதில் அளித்தது. தொழில் கொள்கை, மானியம், அரசு சார் தொழில் நிறுவனம், அறிவுசார் சொத்துரிமை பாதுகாப்பு, இணைய பாதுகாப்பு மற்றும் தரவுப் புழக்கம், அரசு கொள்வனவு, ஏற்றுமதிக்கான கட்டுபாடு உள்ளிட்டவை தொடர்பாக, கொள்கை இலக்கு, எதார்த்தமான நடைமுறைகள், உண்மையான பயன்கள், எதிர்கால திசை முதலிய கோணங்களிருந்து சீனத் தரப்பு விரிவான விளக்கம் அளித்தது.

சில உறுப்பு நாடுகள் சீனாவை "அதிக உற்பத்தி திறன்" மற்றும் "பொருளாதார அச்சுறுத்தல்" என்று விமர்சித்ததற்கு, சீனா உறுதியாக மறுப்பு தெரிவித்தது.

இந்தப் பரிசீலனையின்போது, மொத்தம் 71 உறுப்பினர்கள் நேரடியாக உரைநிகழ்த்தினர். சீனாவின் சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டு திறப்புப் பணியில் பெறப்பட்டுள்ள சாதனைகளையும், உலக வர்த்தக அமைப்பு பணிக்கு சீனாவின் முக்கிய பங்கினையும் அவர்கள் பொதுவாக பாராட்டினர்.