உலகிற்கு வாய்ப்பு தரும் சீனாவின் சீர்திருத்தங்கள்
2024-07-20 20:02:47

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது மத்திய கமிட்டியின் 3ஆவது முழு அமர்வுக் கூட்டம் ஜுலை 15 முதல் 18ஆம் நாள் வரை பெய்ஜிங்கில் நடைபெற்றது. விரிவான சீர்திருத்தங்களை ஆழமாக்குவது மற்றும் நவீனமயமாக்கலை முன்னெடுப்பது குறித்து தீர்மானம் ஒன்று இதில் பரிசீனலை செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது.

இத்தீர்மானத்தில், விரிவான சீர்த்திருத்தங்களை ஆழமாக்குவது பற்றிய பொதுவான இலக்குகள், கால அட்டவணை ஆகியவை வகுக்கப்பட்டுள்ளதோடு, அமைப்புமுறை ரீதியான முன்னேற்பாடும் செய்யப்பட்டுள்ளது. இது, சீனாவின் நவீனமயமாக்கத்திற்கு வழிகாட்டுவதோடு, சீனா தனது சீர்திருத்தங்களை ஆழமாக்குவதன் மனவுறுதி மற்றும் அதில் இருந்து கிடைக்கும் வாய்ப்பு ஆகியவற்றை உலக நாடுகள் புரிந்து கொள்ளவும் உதவுகிறது. இந்த அமர்வுக் கூட்டம், சீனா சீர்திருத்தங்களை ஆழமாக்குவதில் புதிய மைல் கல்லாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்த அமர்வுக் கூட்டத்தில், அறிவியல் தொழில்நுட்பத்தின் புத்தாக்கம் மற்றும் தொழில்களின் நவீனயமாக்கம் ஆகியவற்றுக்கு மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளது என்று பிரிட்டனின் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் குறிப்பிட்டது.